ஊற்றுக

நவம்பர் 26, 2008

ஊற்றுக . . . !


இருந்த ஸ்தானம் தெரிந்தி டாமல்
எங்கெல் லாமோ ஏகுது
ஏகத்துக்கும் நொந்து நொந்து
இதயம் ரெம்ப நோகுது

அருந்த வேண்டும் அள்ளிக் கொண்டுஎன்
ஆவல் மட்டும் கூடுது
அகப்ப டாமல் செல்லச் செல்ல
ஆவி பட்டு வேகுது

உன்னை முற்றும் உறிஞ்சிக் கொள்ள
உயிர் துடித்த பாடுகள்
ஒவ்வொன் றுக்கும் நீட்சி உண்டு
உறக்க மற்ற இராவுகள்

மின்ன லோடு மேவி நிற்க
மேனி பாவம் வாடுது
மிச்ச மீதி நித்தி ரைக்குள்
மெல்ல மெல்லத் தேடுது

கைம டித்துப் படுத்த வாறு
காத்தி ருந்த தெத்தனை
காத லோடு வரவை எண்ணிக்
கனன்று நின்ற தெத்தனை ?

நெய்மு டித்த குழலி யோடுஎன்
நெஞ்ச கத்துள் ஆடுக
நிர்மலத்தி லான தேகம்
நீழ லுக்குள் மூடுக

ராமு ழுக்க ஆண்டு கொண்டு
நர்த்த னத்தைக் காட்டுக
நாமு ழுக்கப் பாமு ழுக்க
நயன பாஷை நீட்டுக

தீமு ழுக்க ஆன மேனி
திகுதி குப்பை மூட்டுக
சீவ னுக்குள் அமுத வெள்ளம்
சிந்து பாடி ஊற்றுக

சிக்கி டாமல் செல்வ தெங்கு
திசையை மட்டும் செப்புக
தேடி வந்து சேர்வன் நீழல்
திருவ டிக்குள் அப்புக

மக்கி டாத தேகம் மாறி
மந்தி ரிக்க உட்புக
மார்க்க மொன்று சொல்ல வேணும்
மதிவெ ளிச்சம் துப்புக

 

-MAGUDADHEEBAN NILAMUTRAM

Follow

Get every new post delivered to your Inbox.